Trains-ல அடிக்கடி பயன் செய்பவர்களா..? வருகிறது புதிய லக்கேஜ் விதிமுறைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள்: மீறினால் அதிக அபராதம்..!
New luggage norms and strict restrictions on Indian Railways
விமான நிலைய பாணியில, இந்திய ரயில்வேயில் லக்கேஜ் விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. பயணிகள் பெரிய சூட்கேஸ்களை இழுத்து வருவது, இருக்கைகளின் கீழ் கூடுதல் அட்டைப்பெட்டிகளை திணிப்பது, மற்றும் சாத்தியமான ஒவ்வொரு மூலையிலும் பைகளை அடுக்கி வைப்பது போன்ற நடவடிக்ககைகளில் பெருபாலானோர் ஈடுபடுகின்றனர்.
இந்திய ரயில்வே துறை லக்கேஜ் விஷயத்தில் இதுவரை தளர்வாக இருந்து வந்துள்ளது. ஆனால், இனிவரும் காலங்களில் இதில் அதிரடி மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளது.ரயில்வே இப்போது விமான நிலையங்களைப் போல் தெளிவான விதிகளுடன் கடுமையான லக்கேஜ் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதாவது, ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் லக்கேஜை மின்னணு எடை இயந்திரங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும், மேலும் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கொண்டு செல்பவர்கள் அபராதத்தை எதிர்கொள்வார்கள். என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சில முக்கிய ரயில் நிலையங்களில் இந்த புதிய மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது படிப்படியாக ஏனைய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொழில்நுட்ப ரீதியாக, இந்திய ரயில்வேயில் லக்கேஜ் விதிகள் உள்ள நிலையில், பெரும்பாலான பயணிகள் அவை மதிப்பதேயில்லை. தற்போது, விமான நிலையங்களைப் போலவே, ரயில்களில் பயணிகள் எந்த வகுப்பில் பயணம் செய்கிண்டார்கள் பொறுத்து புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விதிமுறைகள் கீழ்வருமாறு:
முதல் வகுப்பு ஏசி: 70 கிலோ வரை இலவச லக்கேஜ், மேலும் 15 கிலோ தளர்வு. கூடுதலாக 65 கிலோ வரை பார்சல் வேனில் முன்பதிவு செய்யலாம்.
இரண்டாம் வகுப்பு ஏசி: 50 கிலோ வரை இலவசம், 10 கிலோ தளர்வுடன். கூடுதலாக 30 கிலோ வரை பார்சல் வேனில் முன்பதிவு செய்யலாம்.
மூன்றாம் வகுப்பு ஏசி / ஏசி சேர் கார்: 40 கிலோ இலவசம், 10 கிலோ தளர்வுடன். கூடுதலாக 30 கிலோ வரை பார்சல் வேனில் முன்பதிவு செய்யலாம்.
ஸ்லீப்பர் வகுப்பு: 40 கிலோ இலவசம், 10 கிலோ தளர்வுடன். கூடுதலாக 70 கிலோ வரை பார்சல் வேனில் முன்பதிவு செய்யலாம்.
இரண்டாம் வகுப்பு / பொது வகுப்பு: 35 கிலோ இலவசம், 10 கிலோ தளர்வுடன். கூடுதலாக 60 கிலோ வரை பார்சல் வேனில் முன்பதிவு செய்யலாம்.
பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ் அளவுகள்.
டிரங்குகள், சூட்கேஸ்கள் மற்றும் பெட்டிகள் 100 செ.மீ x 60 செ.மீ x 25 செ.மீ ஐ மீறக்கூடாது. ஏசி 3-டையர் மற்றும் ஏசி சேர் கார் பயணிகளுக்கு வரம்பு சிறியது: 55 செ.மீ x 45 செ.மீ x 22.5 செ.மீ. பெரிய லக்கேஜ்கள் பிரேக் வேன் மூலம் அனுப்பப்பட வேண்டும், குறைந்தபட்சம் ரூ.30 கட்டணத்துடன்.5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதி இலவச அனுமதி உள்ளது, ஆனால் 50 கிலோவுக்கு மேல் இல்லை. அதிக அளவு அல்லது தடையாக இருக்கும் பைகள் போர்டிங் பகுதிகளை தடுத்தால் அபராதம் விதிக்கப்படலாம்.

இவ்வாறான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இலவச அனுமதி கழிக்கப்பட்ட பிறகு, அதிகப்படியான லக்கேஜுக்கு சாதாரண முன்பதிவு விலையில் 1.5 மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என்றும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.30, குறைந்தபட்ச தூரம் 50 கி.மீ, மற்றும் குறைந்தபட்ச எடை 10 கிலோவாகும்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த முடிவு நெரிசலைத் தணிக்கவும், அசௌகரியத்தைத் தடுக்கவும், பெட்டிகளுக்குள் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக பீக் நேரங்களில் .ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள் அல்லது பிற பருமனான பொருட்கள் இலவச அனுமதியின் கீழ் வராது மற்றும் தனியாக முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
எனவே, கடைசி நிமிட அபராதத்தைத் தவிர்க்க, வரம்புகளை கவனமாக சரிபார்த்து, முன்கூட்டியே கூடுதல் எடையை முன்பதிவு செய்யுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
New luggage norms and strict restrictions on Indian Railways