இந்திய ரூபாயின் மதிப்பு உயர கெஜ்ரிவால் தந்த சூப்பர் ஐடியா! - Seithipunal
Seithipunal


காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களை இந்திய ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும்!

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை பற்றி பேசினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியால் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாரத நாடு ஆன்மீகத்தையும் இறை நம்பிக்கையையும் கொண்டது. நாடு வளம் பெற கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும். கடவுளின் ஆசிர்வாதம் பெற நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். 

இந்திய ரூபாயில் ஒரு பக்கம் காந்தியின் புகைப்படம் பெற்றிருப்பது போன்று மற்றொரு பக்கத்தில் விநாயகர், லட்சுமி படங்கள் இடம்பெற வேண்டும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் கடவுள்களின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள். பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் புதியதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும். இந்தப் புதிய ரூபாய் நோட்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தோனேசியா ஓர் இஸ்லாமிய நாடு. அந்நாட்டில் 85% இஸ்லாமியர்கள் வாழும் நிலையில் 2% மட்டுமே இந்துக்கள் வாழ்கின்றனர். ஆனால் இந்தோனேசியா ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் படம் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ரூபாய் நோட்டுகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பாரத பிரதமர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

சில நாட்களுக்கு முன்பு இந்து மதத்தை பற்றியும் ஹிந்து கடவுளான சிவன், விஷ்ணு, பிரம்மாவை பற்றி பௌத்த மதத்திற்கு மாறும் நிகழ்ச்சியில் இழிவாகப் பேசி இருந்தார். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தனது பதவியில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் தேர்தல் களத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிகழும் என அரசியல் விமர்சனங்களால் கருதப்படும் நிலையில் இவரின் இத்தகைய கருத்து அரசியல் களத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Indian currency notes to feature Ganesha and Lakshmi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->