நாடு முழுவதும் நாளை மறுநாள் நடைபெறுகிறது "நீட் தேர்வு"..! - Seithipunal
Seithipunal


எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. 

இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்தமார்ச் 6-ம் தேதி தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டீக்கொட்டை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதனை விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET Exam will be held the day after tomorrow in india


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->