நாடு முழுவதும் இன்று நடக்கிறது "நீட் நுழைவுத் தேர்வு".! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளநிலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று(7ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. 

இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்தமார்ச் 6-ம் தேதி தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட் மற்றும் நீட் தேர்வு தொடர்பான மையங்களை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET exam today all over India may 7


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->