திருமண விழாவிலும் ஆதார் அட்டை - அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமணம்..! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையைகாட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வரும் சூழலில், வித்தியாசமான நடைமுறையால், நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமண விழா ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டையை காட்டும் விருந்தினர்களை மட்டுமே பெண்வீட்டார் அனுமதித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதார் அட்டை இல்லாத விருந்தினர்களுக்கு உணவு வழங்கப்படாததால், பலரும் கோபத்துடன் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பெண்வீட்டார் தரப்பில் தெரிவிக்கையில், அந்த மண்டபத்தில் சகோதரிகள் இரண்டு பேருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஆதார் உள்ளவர்களை மட்டும் அனுமதித்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh marriage function show adhar card member only allowed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->