மும்பை : ஆள்சேர்ப்பு முகாமில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள் மீது போலீசார் தடியடி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தகிசர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தீயணைப்பு படை பிரிவில் பெண்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளம்பெண்கள் கலந்துகொண்டனர். 

அந்த வகையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் இளம்பெண்களுக்கு உயரம் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த உயரம் சரிபார்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு குறைவான உயரம் கொண்ட பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். 

அதுமட்டுமல்லாமல், அதிக உயரம் கொண்டவர்களையும் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயல், ஆட்சேர்ப்பு முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட இளம்பெண்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, அவர்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செல்லும்படி பெண்களிடம் தெரிவித்தனர். 

ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக போலீசார் இளம்பெண்கள் மீது லேசான தடியடி நடத்தினர். இதில், சில பெண்களின் கால்கள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு நடைபெற்ற ஆட்சேர்ப்பு முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai young womans protest in Recruitment camp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->