திருமண அழைப்பிதழ் கொடுக்காததை தட்டி கேட்ட வாலிபர்.! நண்பர்களே கொன்ற சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் பினு. இவருக்கு செபாஸ்டின் மற்றும் விஷ்ணு என்ற இரு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். இவர்களில் விஷ்ணுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. 

இந்த நிலையில், செபாஸ்டினுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதன் காரணமாக, செபாஸ்டின் தனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கிடையே செபாஸ்டின் திருமண வேலையில், நெருங்கிய நண்பரான பினுவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க மறந்துள்ளார். இந்த திருமண அழைப்பிதழுக்காக பினு காத்திருந்தார். 

இது தொடர்பாக பினு மற்ற நண்பர்களிடம் விசாரணை செய்த போது தங்களுக்கு அழைப்புகள் வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பினு செபாஸ்டின் வீட்டுக்குச் சென்று தனக்கு ஏன் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று தகராறு செய்துள்ளார்.

மேலும், அவரிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதைக்கேட்டு, ஆத்திரமடைந்த விஷ்ணு மற்றும் செபாஸ்டின் இருவரும் சேர்ந்து பினுவை சரமாரியாகத் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனால், பினு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பினுவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் பினுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேசமயம் தனது நண்பன் பினு உயிரிழந்த தகவலைக் கேட்டதும் விஷ்ணுவும், செபாஸ்டினும் காவல்துறையிடம் சரணடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala two peoples arrested for kill man


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->