ரூ.8 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர்.. வனப்பகுதியில் சடலமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள புசராஸ் பள்ளத்தாக்கு அருகே ஜியாகோர்டா காட்டில், ரூ.8 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் கமாண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நக்சல் கமாண்டர் தேவா என்ற திரிரி மட்கம் என அடையாளம் காணப்பட்டதாகவும், குவாகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் அவரது உடல் ஆயுதங்களுடன் (செவ்வாய்க்கிழமை) நேற்று மீட்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நக்சல் கமாண்டர் தேவா, தர்பா பிரிவின் சிபிஐ மாவோயிஸ்ட்டின் கட்டேகல்யான் பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் மீது தண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களில் 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தண்டேவாடா காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் 230 பட்டாலியன் ஆகியவற்றின் கூட்டுக் குழு சம்பவ இடத்திற்கு சென்று உடலை அடையாளம் கண்டதாக காவல் கண்காணிப்பாளர் (ஐஜி பஸ்தார் ரேஞ்ச்), பி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

மேலும் நக்சல்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையினாலோ அல்லது நக்சலைட்டுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளாலோ தேவா இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naxal Commander with Rs 8 lakh reward on his head found dead in Chhattisgarh forest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->