மணிப்பூரில் அதிர்ச்சி: ராணுவ வீரர்கள் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: இருவர் வீரமரணம்..!
Mysterious individuals opened fire on a vehicle carrying soldiers in Manipur
மணிப்பூரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் ரைபிள் படைப்பிரிவுக்கு சொந்தமான வாகனத்தில் பாராமிலிட்டரி படை வீர்கள் மணிப்பூரின் இம்பாலிலிருந்து பிஷ்னுபூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இம்பால் மாவட்டத்திலிருந்து 08 கி.மீ. தொலைவில் உள்ள நம்போல் சபால் என்ற பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரர்கள் காயமைந்துள்ளனர்.
உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இத் தாக்குதலுக்கு மணிப்பூர் ஆளுநர் அஜெய் பெல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், இச்சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் மணிப்பூரில் பதற்றம் நிலவியது.
English Summary
Mysterious individuals opened fire on a vehicle carrying soldiers in Manipur