ம.பி. பெண்கள் அதிகம் மது அருந்துகின்றனர்! மது அருந்துவதில் பெண்கள் முதலிடம் – காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரியின் சர்ச்சை பேச்சு
MP women drink more alcohol Women are the top drinkers of alcohol Congress leader Jitu Patwari controversial speech
மத்திய பிரதேசத்தில், மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிட்டார்.
அப்போது அவர்,“மத்திய பிரதேச பெண்கள், நாட்டின் பிற பகுதிகளின் பெண்களை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மாநிலத்துக்கு பதக்கம் வழங்கப்படவேண்டும்.
ம.பி.யை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. அரசு தான் இதற்குப் பொறுப்பு. போதைப் பொருளை ஒழிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும் மகள்களும் மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இன்று, போதைப் பொருள் பயன்பாட்டில் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை கூட முந்தி விட்டது மத்திய பிரதேசம்,” என்று தெரிவித்தார்.இந்தக் கருத்து அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ்,“ஜிது பட்வாரியின் இந்த பேச்சு, பெண்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. பெண்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்ட இந்தக் கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
MP women drink more alcohol Women are the top drinkers of alcohol Congress leader Jitu Patwari controversial speech