இந்தியாவில் அதிக "சொத்துமதிப்பு" கொண்ட இந்து கோயில் எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் நேற்று திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் வருவாய் மற்றும் சொத்து மதிப்பு அதிகம் கொண்ட கோவில் குறித்தான தகவலை நாம் பார்ப்போம். இந்தியாவில் கோவில்களில் சொத்துமதிப்பு எவ்வளவு? கையிருப்பில் உள்ள தாகம் எவ்வளவு என்பது பின்வருமாறு...

இந்தியாவில் செல்வமிக்க கோயில்களில் 7வது இடத்தில மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இதன் ஆண்டு வருவாய் ரூ.6 கோடி ஆகும். அடுத்ததாக 6வது இடத்தில ஷீரடி சாய் பாபா கோவில் உள்ளது. இதன் சொத்து மதிப்பு 94 கிலோ தங்க சிம்மாசனமும், தற்போதுவரை ரூ.400 கோடி நன்கொடையும் பெற்றுள்ளது.

அடுத்ததாக பஞ்சாப் பொற்கோயில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு 400 கிலோ தங்க மேற்கூரை மற்றும் ஆண்டு வருவாய் ரூ.500 கோடி ஆகும்.  4வது இடத்தை குருவாயூர் கோயில் தக்கவைத்துள்ளது. இந்த கோவிலின்  சொத்து மதிப்பு வங்கி வைப்புத் தொகையாக 1,737 கோடி ரூபாயும், 271.05 ஏக்கர் நிலமும் உள்ளது. 3வது இடத்தில உள்ள ஜம்மு வைஷ்ணோ தேவி கோவில் சொத்தாக 1,800 கிலோ தங்கதங்கமும், ரூ.2,000 கோடி ரொக்கமும் உள்ளது.

2வது இடத்தை கைப்பற்றியுள்ள திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு ரூ.1.20 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. எட்ட முடியாத முதல் இடத்தில திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி ஆகும். இந்த வரிசையில் அயோத்தி ராமர் கோவிலும் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Most valuable temples in India


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->