திடீரென உண்டான கொசு சூறாவளி - அதிர்ச்சியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


வெப்ப நிலை காரணமாக புயல், சூறாவளி உருவாவது வழக்கம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது. பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போன்று கூட்டமாக பறக்கிறது.

இந்த வீடியோ வைரலாகி சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒருவர் புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். 

இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என்று மற்றொரு பயனரும் பதிவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mosquito cyclone in maharastra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->