உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியல்! மீண்டும் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி!
Morning Consult World Famous leader PM Modi
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற பிரபல தலைவர்கள் யார்? என்ற கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடிக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு அளித்து உள்ளதாக வெளியான அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் புகழ்பெற்ற பிரபல தலைவர்கள் பட்டியலில், 63 சதவீதம் பேர் ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசு இரண்டாம் பிடித்துள்ளார்.
மேலும், 3-ம் இடத்தில் 60 சதவீதம் பேர் ஆதரவுடன் அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே, 4-ம் இடத்தில் 52 சதவீத ஆதரவுடன் சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் உள்ளார்.
47 சதவீத ஆதரவுடன் அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் 5வது இடத்திலும், 45 சதவீத ஆதரவுடன் பிரிட்டன் பிரதமர் கெய்ரி ஸ்ட்ராமர் 6-வது இடத்திலும் உள்ளனர்.
7-ம் இடத்தில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 45 சதவீத ஆதரவுடன், 8-ம் இடத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 42 சதவீத ஆதரவுடன் உள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 40 சதவீத ஆதரவுடன் 9-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 40 சதவீத ஆதரவுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
English Summary
Morning Consult World Famous leader PM Modi