வதந்திகளை நம்ப வேண்டாம்.. ! 'நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்தாகவில்லை, ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது': வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு..!
Ministry of External Affairs announces that Nimisha Priya sentence has not been cancelled it has only been postponed
கொலை வழக்கு தொடர்பில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாடு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிருபர்களிடம் கூறியதாவது: நிமிஷா பிரியா வழக்கு ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் என்றும், இந்த வழக்கில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறதாகவும், எங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் விளைவாக தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிமிஷா பிரியா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறதாகவும், நம் நாட்டு அதிகாரிகள் சஏமன் நாட்டின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து சாத்தியமான உதவிகளை செய்து வருகிறதாகவும், இதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்திகள் தவறானவை என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள், தவறான தகவல்களில் இருந்து பொதுமக்கள், ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும் என்றும், மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக கூறும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.
English Summary
Ministry of External Affairs announces that Nimisha Priya sentence has not been cancelled it has only been postponed