இந்தியாவில் 4 ஆண்டுகளில் கோடீஸ்வர குடும்பங்கள் இருமடங்கு உயர்வு-வெளியான புள்ளிவிவரம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

Mercedes-Benz Hurun India Wealth Report 2025 வெளியிட்ட அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் 14.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள், 2025 ஆம் ஆண்டில் 28.71 லட்சமாக உயர்ந்துள்ளன. இக்குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.40.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், நிகர மதிப்பு ரூ.1 கோடி 8.5 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள் “கோடீஸ்வர குடும்பங்கள்” என வரையறுக்கப்பட்டுள்ளன.

நகர வாரியாக:

மும்பை – 1.42 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள்

டெல்லி – 68,200

பெங்களூரு – 31,600

மாநில வாரியாக:

மகாராஷ்டிரா – 1.78 லட்சம் குடும்பங்கள் (முதல் இடம்)

தமிழ்நாடு – 72,600 குடும்பங்கள் (மூன்றாவது இடம்)

கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். வெளிநாட்டு முதலீட்டில் அமெரிக்கா அவர்களுக்கு முக்கிய இடமாகத் திகழ்கிறது.

சுவாரஸ்யமான தகவலாக, இந்த கோடீஸ்வரர்களில் சுமார் 60% பேர் தங்கள் ஆண்டு செலவு ஒரு கோடி ரூபாய்க்குள் தான் இருப்பதாக கூறியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Millionaire families in India have doubled in 4 years statistics revealed


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->