ஜாதியை காரணம் காட்டி ஒதுக்கிய காதலி.! திருமணமான பெண்ணை தீர்த்துக்கட்டிய காதலன்.!   - Seithipunal
Seithipunal


தன்னை திருமணம் செய்து கொள்ளாத காதலியை காதலன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கெளசிக் என்ற இளைஞர் தன் வீட்டருகே இருக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் கெளசிக்கை விரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி உள்ளனர். பின் கெளசிக் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அந்த பெண் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். 

அதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஜாதியை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். அதற்கு பிறகு அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டனர். அதன் பிறகு அந்த பெண் திருமணம் முடிந்து கடந்த திங்களன்று ரக்‌ஷாபந்தன் கொண்டாடுவதற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது தனது காதலியை கண்டா கெளசிக் அவரைப்பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த அந்தப்பெண் அன்றிரவு தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்தபோது அங்கே வந்த கெளசிக் ஒரு துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் தலையில் சுட்டுகொன்றுவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் காவல்துறையினர் கெளசிக் மீது வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

men killed her girlfriend who ignored his love for community 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->