அவசரமாக வந்த அழைப்பு.! ஒற்றையாக சென்றவருக்கு சற்றுநேரத்தில் காத்திருந்த மரணம்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள சாஸ்தாவட்டோம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகின்றார். பதினோரு ஆண்டுகளாக அவர் பாம்பு பிடிப்பதை தன்னுடைய தொழிலாக செய்து வந்துள்ளார். 

இதுவரை 348 பாம்புகளை பிடித்து இருக்கும் ஜாகிர் உசேன் 12 முறை பாம்புகளால் கடிபட்டு உயிர் பிழைத்து இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த வாரம் நாவை குளம் பகுதியில் பாம்பை பிடிக்க வருமாறு அவசர அழைப்பு ஒன்று ஜாகிர் உசேன்க்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற ஜாகிர் உசேன் அந்த பகுதியில் இருந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இரவு எட்டு முப்பது மணி அளவில் அந்த பாம்பை பிடித்துள்ளார். மிகவும் விஷத்தன்மை கொண்டதாக அந்த நாகப்பாம்பு இருந்துள்ளது. வெறும் கைகளில் அதனைப் பிடித்த ஜாகிர் உசேன் பாம்பை மேலே தூக்கி இருக்கின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பாம்பு அவரைக் கொத்தியுள்ளது. பின்னர் அவர் கையை உதற அந்த பாம்பு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

விஷ பாம்பு தீண்டிய சிறிது நேரத்தில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து வாயில் நுரை தள்ளி உயிரிழந்த இருக்கின்றார். ஆனால், அவர் உயிரிழந்தார் அதை அறியாத அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men death by snake bit in kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->