மணிப்பூர் மாநில தேர்தல்! இறுதிகட்ட வாக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துதிருந்தது. அதன்படி கடந்த இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு கடந்த 28ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 173 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 22 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் இபோபி சிங்கும் ஒருவர். மொத்தம் 8லட்சத்து 38 38ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவின் போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. 

அதன் காரணமாக 12 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு ஒத்தி வைக்கப்பட நிலையில், அந்த 12 வாக்குச்சாவடிகளிலும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய வாக்குப்பதிவின் போது வன்முறை நிகழாமல் இருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur Final phase election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->