இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகளிடம் தகாத முறையில் அத்துமீறிய நபர் கைது..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இருவரிடம் அத்துமீறிய சம்பவம் தொடர்பாக, இந்துாரில் சந்தேக நபர் ஓருவரை போலீசார் கைது செய்தனர். 

ஐசிசி மகளிர் உலகப்கோப்பையில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்துாரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள், 'ரேடிசன் ப்ளூ' ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், வீராங்கணைகள் இருவர் நடந்து செல்லும் போது கஜ்ரானா சாலை பகுதியில் ​மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அத்துடன், அவர்களை தகாத முறையில் தொட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வீராங்கனைகள் இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  சென்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ் நேற்று முன்தினம் மாலை (அக்டோபர் 23) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, சம்பவத்தின் போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த அகீல் கானை கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது: சந்தேக நபரின் மோட்டார் சைக்கிள் எண்ணை அருகில் இருந்த ஒருவர் குறிப்பிட்டு கூறினார், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அகீல் கான் கைது செய்தோம். அவன் மீது ஏற்கனவே குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man arrested for inappropriately touching Aussie cricketers in Indore


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->