ராக்கி கட்டிய பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற அண்ணன் - உ.பியில் பயங்கரம்.!!
man arrested for harassment with murder in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட பதினான்கு வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சுர்ஜித் என்ற இளைஞர் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். இந்த நிலையில் அன்று இரவு மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலை விடிந்ததும் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த அவரது அப்பா கதறி அழுததுடன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் படி விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசிய சுர்ஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment with murder in uttar pradesh