வன்முறையும் பயங்கரவாதமும் ஏற்று கொள்ள முடியாது.. உதய்பூர் சம்பவத்திற்கு மம்தா பேனர்ஜி கண்டனம்..! - Seithipunal
Seithipunal


உதய்பூரில் நடந்த கொலை சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் என்பவரின் கடைக்கு வந்த இருவர் சட்டை தைக்க செல்வது போல சென்று அவரை கொடூரமாக கொலை செய்தனர். அதனை நேரலையாக சமூகவலைதளங்களிலும் பதிவெற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் கூறினர்.  குற்றவாளிகளை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், துவாக இருந்தாலும் வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் குற்றவாளிகளை கைது செய்ததால்  அனைவரும் அமைதிக்காகுமாறு கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamta condemns udaipur incident


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->