நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது:மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. மீது மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு!
Mamata Banerjee makes a strong allegation against the BJP in West Bengal
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:“பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகளை இலக்கு வைத்து மொழி பயங்கரவாதம் நடத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்குவதற்காக, நாடு முழுவதிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட குழுக்களை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி கணக்கெடுப்புகள் நடத்துகிறது.
யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் எந்தத் தகவலையும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரிக்கும் தகவல்களை பயன்படுத்தி, உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடும்.
அதற்கு பதிலாக, நீங்கள் நேரடியாக வாக்குச் சாவடியில் சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்” என அவர் எச்சரித்தார்.
மேலும், “நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க முடியாது” என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
English Summary
Mamata Banerjee makes a strong allegation against the BJP in West Bengal