'எஸ்ஐஆர் என்ற பெயரில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் சமையல் அறையில் உள்ள பொருட்கள் வைத்து போராடுங்கள்'; மம்தா பானர்ஜி அழைப்பு..!
Mamata Banerjee has called upon women to fight back using kitchen utensils if their rights are violated in the name of the SIR
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் பெண்கள், சமையல் அறை கருவிகளுடன் போராட வேண்டும் என்றும், மக்கள் யாரும், எல்லையில் எல்லை பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணா நகரில் நடந்த பேரணியில் மம்தா மேலும் கொற்றியாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் தாயார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகள் பறித்துவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன், தேர்தலின் போது டில்லியில் இருந்து போலீசாரை அவர்கள் அழைத்து வருவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டால், உங்கள் சமையல் அறையில் உள்ள பொருட்களைஎடுத்துக்கொண்டு போராடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். உங்கள் பெயர் நீக்கப்பட்டால் அதனை விட்டுவிட வேண்டாம். பெண்கள் முன்னால் இருந்து போராட வேண்டும். ஆண்கள் அவர்களுக்கு பின்னால் நின்று போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் அல்லது பாஜ இவற்றில் யார் சக்தி வாய்ந்தவர் என பார்க்க வேண்டும் என்றும், மதவாதத்தில் நம்பிக்கையில்லை. மதசார்பின்மையை நம்புகிறேன் என்றும் மம்தா பேசியுள்ளார். எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போது எல்லாம் பாஜ பணத்தை பயன்படுத்துவதுடன், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்டு வந்து மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்யும் என்று கூறியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக போராடிய வங்க மக்களை, தற்போது குடியுரிமையை நிரூபிக்க சொல்கின்றனர். பாஜ எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என எங்களுக்கு தெரியும் என்றும் மம்தா சூளுரைத்துள்ளார். அத்துடன், அநீதியை எப்படி தடுப்பது என தெரியும் என்றும், பாஜவின் ஐடி பிரிவினர் தயாரிக்கும் பட்டியல் அடிப்படையில் தேர்தலை நடத்த பாஜ விரும்புகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
பீஹாரில் பாஜ விரும்பியதை செய்ய முடியும். மேற்கு வங்கத்தில் முடியாது. மாநில மக்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும், எல்லை பாதுகாப்பு படை முகாம் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee has called upon women to fight back using kitchen utensils if their rights are violated in the name of the SIR