மஹாத்மா காந்தி சிலை சேதம்-இந்திய தூதரகம் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மஹாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மஹாத்மா காந்தி சிலையை மர்ம நபர் ஒருவர் சுத்தியல் மூலமாக சேதப்படுத்தி தலைப்பகுதியை உடைத்துள்ளார் . இவருக்கு பின் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சிலையை நொறுக்கி அதனை காலால் மிதித்தனர். 

இவை அனைத்தும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நியூயார்க் நகர போலீசார் இந்த செயல் வெறுப்பை ஏற்படுத்தும் குற்றமாக கருதி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதனை அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளது.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahatma Gandhi Statue Damaged - Indian Embassy Condemns ..!


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal