மகாராஷ்டிரா அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா - கர்நாடகாவிற்கு இடையே பெலகாவி எல்லை பிரச்சினை ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த எல்லை பிரச்சினை தொடர்பாக பெலகாவி சென்று மகாராஷ்டிரா அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜ் தேசாய் அறிவித்தனர். 

இதற்கு கர்நாடக அரசு கண்டனம் தெரிவித்து, மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகத்திற்கு வந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகாவிற்கு பயணம் நிர்ணயிக்கப்பட்ட நாளான நேற்று பெலகாவியில் பதற்றம் ஏற்பட்டு, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவி வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பு பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாரிகள் மீது கல்வீசி, லாரிகளில் மராத்தி மொழியில் வாசகங்களை கருப்பு மை பூசி அழித்தனர். 

இதேபோல், மஹாராஷ்டிராவிலும் கர்நாடக பேருந்துகளுக்கு கருப்பு மை பூசும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா அமைச்சர்களின் பெலகாவி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharstra ministers come to belagavi karnataka peoples strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->