மகாராஷ்டிராவில் கொரானாவுக்கு இருவர் பலி! 52 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!
Maharastra Corona Death report may 2025
மகாராஷ்டிரத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020-ல் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, மீண்டும் சில பகுதிகளில் தாக்கத்தை காண்பிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் மத்திய சுகாதார அமைச்சகம் நிபுணர்களுடன் ஆலோசித்து நிலைமையை மதிப்பீடு செய்து வருகிறது.
இந்த நிலையிலேயே, மும்பையில் ஜனவரி மாதம் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒருவருக்கு ஹைபோகால்சீமியாவுடன் கூடிய நெஃப்ரோடிக் சிண்ட்ரோம் இருந்ததுடன், மற்றொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி முதல் தற்போது வரை மொத்தமாக 6,066 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மும்பை, புணே, தாணே மற்றும் கோலாப்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
தற்போது 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கின்றதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Maharastra Corona Death report may 2025