பிரபல தாதா சுரேஷ் பூஜாரி பிலிப்பைன்ஸில் கைது... இந்தியா அழைத்து வர நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


தானே, மும்பையை கலக்கி வந்த பிரபல தாதா சுரேஷ் பூஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே காவல் நிலையங்களில் குற்றப்பதிவேட்டில் உள்ளவன் சுரேஷ் பூஜாரி. இவன் இந்திய அளவில் பிரபல தாதாவாக கருதப்படுகிறான். தானே பகுதியில் மிரட்டி பணம் பறித்ததாக 23 வழக்குகள் சுரேஷ் பூஜாரியின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் தானே காவல் துறையினர் அவனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். 

இதனைப்போல, தொடர்ந்து பல குற்றச்செயலில் ஈடுபட்டவன், உள்ளூரிலும் - வெளிநாட்டிலும் தனது தொடர்பை நீட்டித்து இருக்கிறான். இதனையடுத்து, அவருக்கு சர்வதேச காவல் துறையினர் ரெட் கார்னர் நோட்டீசும் வழங்கி இருந்தனர். 

இந்நிலையில், தாதா சுரேஷ் பூஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அந்நாட்டு குடியுரிமை ஆணையத்தின் அதிகாரிகள் சுரேஷ் பூஜாரியை (வயது 48), பரணாக்யூ நகரில் கைது செய்துள்ளனர் என்றும், அவன் நாடுகடத்தப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

சுரேஷ் பூஜாரி கைதான தகவலை உறுதிப்படுத்தாத தானே காவல் துறை அதிகாரிகள், அவனை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவருகிறது. கடந்த 2007 ஆம் வருடத்திற்கு பின்னர், வெளிநாடு தப்பி சென்ற சுரேஷ் பூஜாரி தற்போது சிக்கியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுரேஷ் பூஜாரியின் உறவினர் ரவி பூஜாரி என்ற தாதா, கடந்த 2 வருடத்திற்கு முன்னர் செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டான்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai Pune Famous Rowdy Gangster Suresh Pujari Getting Arrested in Philippines Reports says


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal