மனைவியின் தோழிகளை மயக்கி உல்லாசம்.. விடியோவை நெட்டில் விட்டு காசு பார்த்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விக்ரம் கேட் பகுதியை சார்ந்தவர் மிலிந் ஜெட் (வயது 32). இவர் தானே நகராட்சி போக்குவரத்து கழக பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியின் தோழிகள் இருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, திருமணத்தை மீறிய உறவை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 

அந்த பெண்களுடன் தனிமையில் இருந்த பொழுதுகளை, பெண்களுக்கே தெரியாமல் விடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு ஆபாச இணையத்தளத்தில் பதிவு செய்ததாக தெரியவருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் கடந்த ஜூலை மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மிலிந்த்தை கைது செய்ததில் பேரதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆபாச இணையதளத்தில் மொத்தமாக 62 வீடியோ காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளார். இதன் மூலமாக ரூ.5 இலட்சம் சம்பாத்தியமும் செய்துள்ளார். இதனையடுத்து மிலித் தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Mumbai man cheat wife girl friend video released Porn website and earn money


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->