மகாராஷ்டிரா | கனமழையால் நிலைச்சரிவு! 4 பேர் பலி, 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாயம்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, மும்பை பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ராய்கார்ட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உள்ளதால் நிலச்சரிவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. இதனால் இரண்டு தேசிய பேரிடம் மீட்புக்குழு படைகள் சம்பவ இடத்திற்குச் சென்று 25 பேரை மீட்டனர். 

அதில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தொடர்ந்து இன்று காலையும் மீட்பு படையினர் மற்றும் 100 க்கும் அதிகமான போலீசார், மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

மேலும் தன்னார்வலர்களும் மீட்பு பணியில் இணைந்து பொதுமக்களை மீட்டு வருகின்றனர் என, ராய்கார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இதனால் சாவித்ரி, பதல்கனாக ஆகிய இரண்டு நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி உள்ளது. குண்டலிகா, அம்பா நதிகளில் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது. 

மேலும் மும்பை ராய்கார்ட், பல்கார் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதன் காரணமாக தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை மும்பையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra landslide 4 dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->