சாலைகளில் பிணக்குவியல்.. கதறியழுத உறவினர்கள்.. பெரும் சோகத்தை தந்த பேருந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


பேருந்து ஆற்றில் கவிழுந்து விபத்துக்குள்ளானதில், 45 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்திக் மாவட்டத்தில் சென்று கொண்டு இருந்த பேருந்தில், ஓட்டுநர் உட்பட 60 பேர் பயணம் செய்த நிலையில், அங்குள்ள பன்சாகர் கால்வாய் அருகே பேருந்து சென்றுள்ளது. 

இதன்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, ஆற்றுக்குள் கவிழுந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், இதற்குள்ளாக 32 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினர். 

ஆறில் நீர் சென்று கொண்டு இருந்ததால், பேருந்து முழுவதும் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்ம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம் நிதிஉதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், இவ்விபத்தில் தற்போது வரை 45 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களின் உடலை சாலையில் வைத்திருந்த நிலையில், அங்கு வந்த உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya pradesh Bus Accident Police Investigation 16 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->