2100-க்குள் மனிதகுலத்திற்குப் பெரும் ஆபத்து: லான்செட் ஆணையத்தின் அதிர்ச்சி அறிக்கை! - Seithipunal
Seithipunal


இருபத்தோராம் நூற்றாண்டின் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்துப் பிரபல 'லான்செட்' ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 75 ஆண்டுகளில் அதாவது 2100-க்குள் மனித ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்விற்கும் பேரிடர் விளைவிக்கக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, அணுஆயுதப் போர்கள், செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு மற்றும் ஆபத்தான உயிரி ஆயுதங்கள் (Bio-weapons) ஆகியவை மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்க அதிக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் உயிரியல் ஆயுதங்கள் மில்லியன் கணக்கானோரின் உயிரைப் பறிப்பதோடு, மொத்த மனித இனத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும். மேலும், அணு ஆயுதப் போர்களால் வளிமண்டலத்தில் பரவும் நச்சுத் துகள்கள் சூரிய ஒளியைத் தடுத்து, கடுமையான உணவு நெருக்கடியையும் பெரிய அளவிலான பஞ்சத்தையும் உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் மற்றும் சர்வதேச உதவிகளைக் குறைப்பது போன்ற சவால்களும் மனிதகுலத்தை அச்சுறுத்துகின்றன. 35 நிபுணர்கள் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் உலக சுகாதார உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நாடுகளின் கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், தலைவர்கள் இன்று எடுக்கும் முடிவுகளே எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைத் தீர்மானிக்கும் என்றும் லான்செட் ஆணையத்தின் இணைத் தலைவர் பேராசிரியர் கிறிஸ்டோபர் முர்ரே எச்சரித்துள்ளார். அரசாங்கங்கள் உடனடியாக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து இத்தகைய சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lancet Commission Report Warns of 17 Major Global Health Threats by 2100


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->