உறுதியாக நிற்கும் அதிமுக., சவால் விடும் பாஜக.! வேடிக்கை பார்க்கும் உபிக்கள்.! விறுவிறுக்கும் அரசியல் களம்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தவிர்க்கமுடியாத சக்தியாக பாஜக உருவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்து வருகின்றார். அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்ற சர்ச்சை கிளம்பி வருகிறது. இந்நிலையில், அதிமுகவினர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர். 

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், "அடுத்து அமையப் போகும் ஆட்சியை தீர்மானிப்பது பாஜக வாகத்தான் இருக்கும். தேர்தலில் பாஜக தவிர்க்கமுடியாத சக்தியாக பாஜக இருக்கும். எத்தனை தடை வந்தாலும் வேல் யாத்திரை வெற்றி அடைந்தே தீரும்." என்று சவால் விடுத்துள்ளார். 

எதிர்க்கட்சியான திமுகவுடன் அதிமுக போட்டியிட வேண்டிய நேரத்தில் கூட்டணி கட்சியான பாஜக பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது. இருதரப்பினரும் பாய்ந்து அரசியல் செய்து வரும் நேரத்தில், திமுகவினர் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

l murugan pressmeet about coalition govt


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal