கோடை மழை எதிரொலி: கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. 

இந்நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 1373 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களில் 294 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பாதிப்பால் 6 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் காய்ச்சல் பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து தீவிர படுத்தி வருகிறது. சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்காக கொசு உற்பத்தியை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala summer rains Increase dengue 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->