சபரிமலைக்கு வரும் வெளி மாநில பக்கதர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்துச் செல்லலாம் -  கேரளா அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பூஜை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 

அதிலும் குறிப்பாக சபரிமலைக்கு வருபவர்களில் தென் மாநில பக்தர்களே அதிகம். இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- 

"கொரோனா தொற்று பரவலின் காரணமாக சபரிமலைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களின் வருகை மிக குறைவாக இருந்தது. ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. 

இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் இருந்து நீண்ட தூர பயணமாக பக்தர்கள் சபரிமலை வருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு ஓய்வு கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் மலை ஏறும்போது சிரமமாக இருக்கும். 

இதனை நினைவில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இளைப்பாறிய பிறகு மலை ஏற்ற நடை பயணத்திற்கு தயாராக வேண்டும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala minister other state sabarimala visitors relax on nilakal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->