பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்கிறார்கள். 

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில், சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். 

இந்தக் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் கேரள டிஜிபி நேரடியாக தலையிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala high court order to state government for basic amenities to sabarimalai devotees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->