உச்சகட்ட கொந்தளிப்பில் கேரள மாநிலம்! நெருக்கடியில் முதல்வர் பினராயி! பரபரப்பு செய்தி!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கடத்தல் பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணி செய்த ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது சுங்க இலாகா அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா திருச்சூர் மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை 100 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கடத்தப்பட்டு இருக்கும் என அதிகாரிகள் அவர் மீது சந்தேகம் கொள்கின்றனர். தற்போது வரை இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே, கேரள அமைச்சர் ஜலீல், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து, அமைச்சர் ஜலீலிடம் அமலாக்கத்துறையினர் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேரள அமைச்சர் ஜலீல் அவர்களை விசாரணை செய்து உள்ளனர். இதனால் கேரளா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஜலீல் பதவி விளக்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பு, பாஜக உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6 நாட்களாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே டி ஜலீல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக, மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களால் தற்போதைய பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cm struggled gold smuggling case issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->