சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய கருப்பு நிற ஆடையுடன் சென்று சுவாமி தரிசனம் செய்த கேரள முதல்வர் வி.டி. சதீசன்..! - Seithipunal
Seithipunal


பிரசித்திபெற்ற கேரளம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர்  வி.டி. சதீசன் இன்று சனிக்கிழமை மக்களுடன் மக்களாக இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

ஐயப்ப பக்தர்கள் அணியும் பாரம்பரிய கருப்பு நிற ஆடையை அணிந்து, முதல்வர் சதீசன் மலை ஏறியுள்ளார். அவருடன் மாநில காவல் துறை தலைமை இயக்குநர் ரவடா ஏ. சந்திரசேகர் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

 ஆனால், அவர் கோயிலுக்கு 'இருமுடி' ஏதும் இன்றி சென்றதை வீடியோ காட்சிகளில் காண முடிந்தது. அப்போது, ''சுவாமியே சரணம் ஐயப்பா'' என்ற முழக்கங்களுக்கு இடையே, தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களைப் பார்த்து முதல்வர் புன்னகைத்து கையசைத்து சென்றார்.

மலையாள மாதமான துலாம் மாத பூஜைகளுக்காகக் கோயில் நடை இன்று திறக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

முன்னதாக, சபரிமலை அடிவாரத்திலுள்ள பம்பைக்குச் சென்ற முதல்வர் சதீசன், நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Chief Minister VD Satheesan visited the Sabarimala Ayyappa Temple and offered prayers


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->