கரூர் சம்பவம்..ஆந்திராவில் எதிரொலி;முன்னாள் முதல்வர் ரோடு ஷோவுக்கு தடை!
Karur incident Repercussions in Andhra Pradesh Former Chief Ministers road show banned
கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு போலீசார் தடை விதித்தனர்.
கடந்தமாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
இதையடுத்து இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார்.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை திரட்டி வருகின்றனர்.இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து அனகாப்பள்ளி மாவட்ட தலைவரும், முன்னாள் மந்திரியுமான அமர்நாத் ரெட்டி கூறுகையில்:- அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும்.போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம் என்றார்.
English Summary
Karur incident Repercussions in Andhra Pradesh Former Chief Ministers road show banned