கூட்டணி இழுபறிக்கு நடுவே, வேட்பாளராக பிரியங்கா காந்தியை அழைக்க தயாரான காங்கிரஸ்!  - Seithipunal
Seithipunal


2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக கூட்டணியில், திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சவ்வு போல இழுத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், எந்தவித முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்து  கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டமானது சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கே எஸ் அழகிரி, " திமுக நம்மை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது என கண்ணீர் விட்டு பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளுக்கும் திமுக கொடுப்பதாக சொல்லும் தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்குமான அளவு வித்தியாசம் இருக்கிறது. நாம் திமுகவுடன் 110 தொகுதிகளில் கூட்டணி வைத்தோம் அது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தொகுதிகளை குறைத்துக்கொண்டே போட்டியிட்டு வருகிறோம். ஆனால் தற்போது அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் வாங்கி போட்டியிட்டோம் என்றால், அடுத்த முறை நாம் சென்று பேசுவதற்கு கூட இடம் தரமாட்டார்கள்" என்று கண்ணீர் மல்க பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முக்கிய தலைவரை நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும். அப்போது தான் கட்சியை பலப்படுத்த முடியும் என காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது. அதனால் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வேட்பாளரை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

அதனை உறுதி செய்யும் விதமாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விருப்பமனு அளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் விருப்ப மனு வாங்கும் அலுவலர்களிடம் பிரியங்கா காந்திக்கான விருப்ப மனுவை அளித்துள்ளார். ராகுல் காந்தி கேரளாவில் மக்களவை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karti Chidambaram MP gives willing petition to Kanyakumari Lok Sabha seat For Priyanka vadra Gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->