முன்னாள் காதலனை போட்டுத்தள்ள, இந்நாள் காதலனுடன் கரம் கோர்த்த பெண்.. அரங்கேறிய வெறித்தனம்.. சுட்டுப்பிடித்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம் சாகர் பழைய இக்கேரி பகுதியை சார்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ரோகினி. இவர்கள் இருவருக்கும் 10 மாதமாகும் குழந்தை இருக்கிறது. பிரவீனின் தாயார் பங்காரம்மா. கடந்த 11 ஆம் தேதி இரவு நேரத்தில் பிரவீனின் இல்லத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பிரவீன் மற்றும் அவரது தாயார் பங்காரம்மாவை கொடூர கொலை செய்து தப்பி சென்றனர். 

வீட்டில் இருந்த ரோகினி மற்றும் அவரது 10 மாத கைக்குழந்தையை கொலை செய்யாத நிலையில், இது குறித்து சாகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். காவல் துறையினரின் விசாரணையில், திருமணத்திற்கு முன்னதாக பிரவீன் சுருதி என்ற பெண்மணி காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரவீன் திடீரென சுருதியை பிரிந்து, ரோஹிணியை திருமணம் செய்துள்ளார். 

இதனால் சுருதி தனது புதிய காதலன் பரத் கவுடாவுடன் சேர்ந்து பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இவர்களின் திட்டப்படி கடந்த 11 ஆம் தேதியன்று பரத் கவுடா தனது கூட்டாளிகளுடன் சென்று பிரவீன் மற்றும் அவரது தாயாரை கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை சமப்வத்தில் ஈடுபட்ட பரத்தை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அங்குள்ள சாகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிவமொக்கா குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பரத்தை சுற்றி வளைத்துள்ளனர். 

அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சிக்கவே, காவல் ஆய்வாளர் குமாரசாமி வானை நோக்கி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டு கொலையாளியை சரணடைய கூறி எச்சரித்துள்ளார். பரத் தொடர்ந்து தப்பி செல்லும் முயற்சியில் இருந்ததால், பரத்தின் வலதுகாலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கி குண்டு பட்டதும் சுருண்டு விழுந்த பரத்தை மீட்ட காவல் துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Shivamogga 2 Murder case police arrest culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->