கல்யாணத்துக்கு தேதி குறித்த தம்பதிகள் கவனம்.. விபரீத போட்டோ சூட் பேரில் உயிரை விட வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் டி.நரசிபுரா கிராமத்தை சார்ந்தவர் சந்துரு (வயது 28). இவர் கட்டிட பொறியாளராக இருந்து வருகிறார். இதே பகுதியை சார்ந்த சசிகலா (வயது 20) என்ற பெண்மணிக்கும், சந்துருவிற்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர்களும் பேசி முடித்துள்ளனர். இவர்களின் திருமணம் வரும் 22 ஆம் தேதி நடைபெற தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்னதாகவே சந்துரு மற்றும் சசிகலா புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்று தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், புகைப்பட கலைஞர்களுடன் அங்குள்ள மல்லிகார்ஜுனோ கோவிலுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்த நிலையில், அங்கிருந்து புறப்பட்ட காவேரி, கபினி, சப்திகா ஆறுகள் ஒன்றினையும் திருமக்கூடலு பகுதிக்கு வந்துள்ளனர்.

அங்கு வைத்து புகைப்படம் எடுக்க திட்டமிடப்பட்டு, தம்பதிகள் இருவரும் பரிசலில் செல்ல, டைட்டானிக் பாணியில் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதன்போது பரிசலில் இருந்து தம்பதிகள் இருவரும் தவறி விழுந்து ஆற்றின் வேகம் காரணமாக பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். நண்பர்கள் மற்றும் புகைப்பட குழுவினர் இவர்களை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தம்பதிகளின் உடலை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இதனைக்கண்ட குடும்பத்தினர் கதறியழவே, அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. தம்பதியை காப்பாற்ற ஆற்றில் குதித்த நண்பரை அப்பகுதி மீனவர்கள் மீது சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணத்தின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் முக்கியமானது என்றாலும், விபரீதமான புகைப்படங்கள் எடுக்கும் முயற்சி தோல்வியை தழுவினால் உயிர்பலி ஏற்படும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mysore Couple Photo Shoot Death 10 November 2020 in River


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->