நட்புக்கு ரூ.300 அனுப்பி, ரூ.1 இலட்சம் மொய் வைத்த சோகம்.. கூகுள் பே சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் அரகேரே பகுதியை சார்ந்தவர் நாகபூஷணி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், தனது நண்பருக்கு நாகபூஷன் கூகுள் பே மூலமாக ரூ.300 அனுப்பியிருக்கிறார். 

ஆனால், அவரது நண்பருக்கு பணம் செல்லாமல் தோல்வியற்ற நிலையில், கூகுள் பே வாடிக்கையாளர் மைய சேவை இணையத்தின் அலைபேசி எண்ணை தேடி கண்டறிந்துள்ளார். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக முறையிட்டுள்ளார்.  

மறுமுனையில் பேசிய மர்ம நபர், பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வங்கி கணக்குகளை தங்களுக்கு அனுப்புமாறும் கூறியுள்ளனர். இதனைநம்பிய பூஷனும் வங்கி கணக்குகளை அனுப்பி வைக்கவே, சில நிமிடத்திற்குள் ரூ.1 இலட்சம் வரை எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நாகபூஷன் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து, அங்குள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka man cheated by fraud gang


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->