காதலை முறித்துக்கொண்டதால், நடுரோட்டில் காதலியை வெட்டி கொலை செய்ய முயற்சி.. வெளியான பகீர் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்வாட் மாவட்டம் ஹப்பல்லி (Hubballi) நகரை சார்ந்த பெண்மணி 21 வயது பெண்மணி சாலையில்  கொண்டு இருந்துள்ளார். இதன்போது இவரை இடைமறித்த ஆட்டோ ஓட்டுநர் இஸ்மாயில் (வயது 25), திடீரென தான் வைத்திருந்த அரிவாளை வைத்து பெண்ணை சரமாரியாக வெட்டுகிறார். 

இதனால் நிலைகுலைந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே மயங்கிவிழவே, அப்பகுதியினர் காவல் ஹப்பல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹப்பல்லி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட 21 வயது பெண்மணியும் - இஸ்மாயிலும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரமாகவே பெண்மணி காதலனுடன் பேசாமல் இருந்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த இஸ்மாயில் பெண்ணை கொலை செய்ய முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Hubballi girl Murder Attempt by Love Boy Viral Video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->