#BREAKING | ராஜினாமா செய்கிறார் பசவராஜ் பொம்மை!   - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 25 தொகுதிகளில் வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் முன்னிலை நிலவரத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக 57 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளதால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாகி உள்ளது.

ஆளும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இன்று மாலையே முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியை இழந்த போதிலும் ஷிகான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை 90 ஆயிரம் வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர், முதல்வர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டி.கே.சிவகுமார் 83 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 


தென் மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் ஆட்சி செய்வதற்கு உண்டான சூழல் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகா, தற்போது அந்த மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளதால், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election Result 2023 CM Resign


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->