குடிகார மகனின் தொல்லை தாங்காமல், குடும்பத்தோடு எடுத்த முடிவு.. கை, கால், தலை இல்லாமல் மீட்கப்பட்ட சடலம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஆவலஹள்ளி ஏரிப்பகுதியில், கடந்த 12 ஆம் தேதி தலை, கை, கால்கள் இல்லாமல் வாலிபரின் உடல் கிடந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆவலஹள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், கொலையான வாலிபர் மல்லேஸ்வரம் பகுதியை சார்ந்த சாப்டவேர் எஞ்சினியர் கவுசல் பிரசாத் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. மேலும், மகனை காணாது கவுசல் பிரசாத்தின் தந்தையும் மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, கவுசல் பிரசாத்தின் தந்தை கேஷவ்வை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் கைது செய்து விசாரிக்கையில், மகனை கூலிப்படை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விசரணையில், பல அதிர்ச்சி தகவலும் வெளியானது. 

சாப்டவேர் என்ஜினியராக கவுசல் பிரசாத், மல்லேஸ்வரம் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தினமும் நண்பர்களுடன் சென்று மது விருந்திற்கு சென்று, வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனை தந்தை என்ற முறையில் மகனை தட்டிகேட்கவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. 

மேலும், தினமும் மது அருந்திவிட்டு வரும் கவுசல் பிரசாத், தந்தை கேசவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகனை கொலை செய்ய கூலிப்படை ஏவியது அம்பலமாகியுள்ளது. இந்த கொலைக்கு கவுசலின் தம்பி கவுதமும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த கொலைக்காக கூலிப்படையை சார்ந்த விஷ்னுவிற்கு ரூ.3 இலட்சம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

குடிகார மகனின் தொல்லை தாங்காமல், தந்தை மற்றும் தம்பி சேர்ந்து அரங்கேற்றிய கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Aavalahalli Lake Dead Body Case Dad Murder Son Police Find Mystery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->