இது சாதாரணமான காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது - பிரச்சாரத்தில் அன்பை வெளிப்படுத்திய கமல்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். பின்னர் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

"நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும். உங்கள் (மக்கள்) மனங்களிலும் எனக்கு இடம் உண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடம் உண்டு என்பதை அறிவேன்.

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின் அன்பாலும் உண்டு; அதனால்தான் அரசியலுக்கு நான் வந்தேன்.

திராவிட மாடல் என்பது ஒரு சிந்தாந்தம். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை, இந்தியா முழுவதும் செயல்படுத்தினால், உலகே இந்தியாவை திரும்பிபார்க்கும். மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இவையெல்லாம் இந்தியா முழுவதும் வரவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamalhaasan election campaighn in sri rangam


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->