ஏழை மக்களுக்கு தேவையான தேர்தல் அறிக்கை.. இலவசங்கள் குறித்து ஜெ.பி நாட்டா விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமர் மோடி இலவசங்களால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை எனக் கூறிவரும் நிலையில் பல்வேறு இலவச திட்டங்கள் இடம் பெற்றுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை விமர்சனத்திற்கு ஆளானது. 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா "ஏழை மக்களின் தேவை அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதை இலவசமாக கருதக்கூடாது. இலவசத்திற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. நாங்கள் மக்களுக்கான உரிமையை தான் வழங்குகிறோம்.

ஆயுஷ்மான் பாரத், ஏழைகளுக்கான உணவு திட்டம் போன்ற திட்டங்களால் ஏழைகள் பயன் அடைகிறார்கள். இலவசங்கள் பிரபலப்படுத்துவதற்கானவை. எந்த ஒரு ஏழையும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதனை வழங்குகிறோம்.

ஏழைகளின் பிள்ளைகள் எதிர்காலத்தில் கண்ணியமாக வாழ நல்ல கல்வியை பெற முடியும். அதுதான் அதிகாரம். பாஜகவின் தேர்தல் அறிக்கை கர்நாடகாவின் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கானது. பாஜகவின் தேர்தல் அறிக்கை ஏசி அறையில் அமர்ந்து கொண்டு உருவாக்கப்படவில்லை. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நமது தொழிலாளர்கள் மிகுந்த உழைப்பு விடாமுயற்சி செய்து உருவாக்கியுள்ளனர்" என ஜெ.பி நட்டா விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Natta explains about Karnataka election BJP manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->