சட்டமன்றம் வந்த பத்திரிக்கையாளருக்கு கொரோனா! முதலமைச்சர் உட்பட அத்தனை பேரும் பீதியில்!  - Seithipunal
Seithipunal


பத்திரிகையாளர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மத்திய  பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

இந்த பத்திரிக்கையாளர் அண்மையில் அந்த மாநிலத்தில் பரபரப்பாக நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த கமல்நாத் ராஜினாமா செய்தபோது செய்தியாளர்களை சந்தித்த பொழுதும் அந்த பத்திரிகையாளர் அங்கிருந்துள்ளார். 

அதேபோல கமல்நாத் ராஜினாமாவை எடுத்து மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்பு விழாவிலும் இந்த பத்திரிகையாளர் கலந்து கொண்டுள்ளார். அந்த அவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது முதலமைச்சர் முதல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பீதியில் உறைந்து போயுள்ளனர். 

பத்திரிகையாளருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை விசாரிக்கையில், கடந்த மார்ச் 17-ம் தேதியன்று லண்டனில் இருந்த பத்திரிக்கையாளரின் மகள் இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். அவரும் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பத்திரிகையாளரின் மனைவி, மகன் மற்றும் வீட்டு உதவியாளர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வில்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது. 

தனக்கு கொரோனா தொற்று இருப்பதையே அறியாமல் சட்டப் பேரவை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கலந்து கொண்டு உள்ளது  சட்டமன்ற அலுவலர்கள், உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் பீதியை உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

journalist has been tested positive in Bhopal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->