ஒரு பெண் விவசாய நிலத்தை உழுவதா? கெட்ட சகுனம் என்று கூறி அபராதம் விதித்த பஞ்சாயத்து.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள தாஹு டோலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவரிடம் சுமார் பத்து ஏக்கர் நிலம் உள்ளது. 

இவர் தொடர்ந்து விவசாயப் பணியை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அண்மையில் பயன்படுத்தி விற்பனைக்கு வந்த டிராக்டர் ஒன்றை வாங்கினார். அதனை கொண்டு தனது நிலத்தை உழுதுள்ளார்.

பெண்கள் நிலத்தை உழுதால் அது கெட்ட சகுனம் என்ற  மூடநம்பிக்கையினால் அந்த கிராமப் பஞ்சாயத்தினர், மஞ்சு ஓரோனுக்கு  அபராதம் விதித்துள்ளனர். இதனால் அந்த பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் தெரிவித்துள்ளதாவது,"நிலத்தை உழுவது ஆண்களின் வேலை என்றும், பெண்கள் நிலத்தை உழுதால் அது அபசகுனம் என்றும் கிராமத்துக்கு பெரிய ஆபத்து அல்லது வறட்சி ஏற்படும் என்றும் எனக்கு கிராம பஞ்சாயத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

நான் ஏர் உழவில்லை. டிராக்டர் கொண்டுதான் உழுவதாக அவர்களுக்கு விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

நான் நிலத்தை உழக் கூடாது என்று கிராம பஞ்சாயத்தினர் உத்தரவிட்டுள்ளனர். மீறினால்  கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். நான் இதனை ஏற்காமல் பஞ்சாயத்திலிருந்து வெளியேறிவிட்டேன்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jharkhand one panchayat bans woman tilling land


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->