#BREAKING: ராஜஸ்தானில் விமானம் படையின் ஜெட் விமானம் விபத்து..!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த பரத்பூர் மாவட்டத்தில் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்துள்ளார். சார்ட்டர் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து காலை 10-10.15 மணியளவில் விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த விமானப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் . விபத்துக்குள்ளானது இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமான விபத்தில் சிக்கியது விமானப்படைக்கு போர் விமானமா அல்லது வழக்கமான விமானமா என்பதை தீர்மானிக்க முடியவில்லை என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று இந்த விபத்தில் சிக்கிய விமானிகள் வெளியேறினார்களா அல்லது இன்னும் உள்ளே இருக்கிறார்களா என்ற தகவல் உறுதி செய்ய முடியவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் விபத்துக்குள்ளான நிலையில் ராஜஸ்தானிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jet plane crashes in Rajasthan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->